#BREAKING : மாண்டஸ் புயல் எதிரொலி.. சென்னையில் விமான சேவை ரத்து.! - Seithipunal
Seithipunal


தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவு 'மாண்டஸ்' புயலாக வலுப்பெற்றது.

தற்போது 'மாண்டஸ்' புயல் காரைக்காலுக்கு தென்கிழக்கே 500 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 580 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவல்படி, மாண்டஸ் புயல் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே நாளை நள்ளிரவில் கரையை கடக்கும். இதன்காரணமாக வடதமிழகம், புதுச்சேரி, தென் ஆந்திர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.

மேலும், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, டாக்கா ஆகிய இடங்களுக்கு செல்லும் 11 விமானங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mandus storm Flight service canceled in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->