மலாய், சீனம் உள்ளிட்ட 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் மணிமேகலை காப்பியம்..! - Seithipunal
Seithipunal


ஐப்பெரும் காப்பியமான மணிமேகலை 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளது.

மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. சீத்தலை சாத்தனார் எழுதிய இந்த காவியம் பௌத்தமத்தை சார்ந்தது. 30 அத்தியாயங்களையும்  4 ஆயிரத்து 861அகவல் அடிகளையும் கொண்டது இந்த காப்பியம். பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள மணிமேகலை காப்பியம் 20 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தமிழ் பேராசிரியர்கள், அறிஞர்கள்  இந்த பணியில் ஈடுப்படுத்தபட உள்ளன. மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தால் நடைபெறும் இதில், மலாய், சீனம், ஜப்பானிய, மங்கோலிய மற்றும் பர்மிய மொழிகள் உள்ளிட்ட 20 மொழிகளில் மொழிப்பெயர்க்கபட உள்ளது.

முன்னதாக் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்கள் மொழிபெயர்ப்பு செய்ய மே அல்லது ஜூன் மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Manimegalai translated into 20 languages


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->