நடிகர் மனோபாலா உயிரிழந்தது எப்படி? என்ன காரணம்?!
Manobala Death reason
நடிகர் மனோபாலா உடல்நல குறைவால் இன்று காலமானார். அவரின் இறப்புக்கு கல்லீரல் பிரச்சனை தான் என்பது சற்று முன்பு தெரிய வந்துள்ளது.
வடபழனியில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்து உள்ளார்.
![](https://img.seithipunal.com/media/manobala1.jpg)
69 வயதாகும் நடிகர் மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். சுமார் 200 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகராகவும், குணசத்திர வேடங்களிலும் நடிகர் மனோபாலா நடித்துள்ளார்.
கல்லீரல் பிரச்சனையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது அவரின் உயிர் பிரிந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு திரைத்துறையினரும், அரசியல் கட்சி பிரமுகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
![](https://img.seithipunal.com/media/manobala2.jpg)
நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், அருமை நண்பர் மனோபாலா உடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
நடிகர் வடிவேலு விடுத்துள்ள இரங்கல் செய்தி : நடிகர் மனோபாலாவின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அனைவரிடமும் அன்பாக பழக கூடிய மனோபாலாவின் மரணம் எனக்கு தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தி உள்ளது.