மன்சூர் அலிகான் குடித்தது விஷமா? வெளியான பகீர் அறிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற பொது தேர்தலில் வேலு தொகுதியில் சுயேட்சையாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழம் சின்னத்திற்காக வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை கேகே நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த நிலையில் உடல் நலக்குறிவு ஏற்படுத்தக் குறித்து மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‌"நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்தில கட்டாயப்படுத்தி படை ஜூஸ் கொடுத்தாங்க. அதன் பிறகு மோர் கொடுத்தாங்க. குடிச்ச உடனே ஏன் வண்டியில் இருந்து கீழே விழுந்தேன்.

 

மயக்கம் மற்றும் அடி நெஞ்சுல தாங்க முடியாத வலி உடனே பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க.‌ சிகிச்சை கொடுத்தும் வலி நிக்கல. வலி அதிகமாகவும் சென்னைக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து ஐ சிவில் அட்மிட் பண்ணி இப்ப கொஞ்சம் கம்மியா இருக்கு. விஷ மறிவு நுரையீரல் வலி போக ட்ரிப்ஸ் கொடுத்தாங்க. இன்று மதியம் 2:00 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுது" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mansoor Alikhan accused forcing to drink poisoned juice


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->