இந்தா வர்றேன்டா... யாருடன் கூட்டணியாக இருந்தாலும்..! டி.டி.வி.தினகரனுக்கு மன்சூர் அலிகான் அதிரடி சவால்!  - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகில் வில்லன் நடிகராக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து பேசிய கருத்துகள் மிகப்பெரிய சர்ச்சையாக இருந்தது. இதனை ஒட்டி மன்சூர் அலிகான் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் டி.டி.வி. தினகரனை எதிர்த்து மன்சூர் அலிகான் போட்டியிட போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது, 

''கடந்த 1999 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நான் புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்டைவண்டி சின்னத்தில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகளை பெற்றேன். 

ஆனால் டி.டி.வி. தினகரன் ஜெயலலிதா பெயரால் வெற்றி பெற்றார். நான் ஜெயலலிதா மரணத்திற்கு வழக்கு தொடர்ந்து அனைத்து ஆவணங்களையும் வைத்துள்ளேன். 

அம்மாவின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டவரை ஆளுநர் உள்பட யாரையும் பார்க்க விடாமல் செய்தனர். இதனை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் கடந்த 1999 ஆம் ஆண்டு நான் தோல்வி பெற்ற அதே பெரிய குளம் தேனி மண்ணில் டி.டி.வி. தினகரனை எதிர்த்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன். 

இது சத்தியம். எந்த கட்சியுடன் கூட்டணியாக இருந்தாலும் சரி. இந்தா வர்றேன் டா... என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mansoor alikhan contest against ttv dhinakaran parliamentary elections


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->