திருவண்ணாமலை : மார்கழி மாத கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரம்!
Markazhi month Girivalam timings
திருவண்ணாமலை மார்கழி மாத கிரிவலம் இன்று தொடங்குகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
மேலும், ஒவ்வொரு மாத பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் மார்கழி மாதத்திற்கான பவுர்ணமி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.26 மணிக்கு தொடங்கி மறுநாள் 7-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4.20 மணிக்கு நிறைவடைகின்றது. பக்தர்கள் கிரிவலம் செல்வதையொட்டி அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
English Summary
Markazhi month Girivalam timings