21 ஆக உயர்த்துறிங்களா., கூடவே கூடாது.! அய்யயோ., அய்யாக்கண்ணு ஆர்ப்பாட்டம்.!
marriage age issue ayyakannu arrest
நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.
இது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வந்த நிலையில், பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்க விரைவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஆம், பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை தாக்கல் செய்வதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பெண்களின் திருமண வயது சட்ட மசோதா நிகழ் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு இதனை தாக்கல் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த மசோதா நிறைவேறும் பட்சத்தில், குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும்.
இந்நிலையில், பெண் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அய்யாக்கண்ணு, பெண்கள் உட்பட 70 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு தெரிவிக்கையில், "தற்போது 10 வயது முதல் 13 வயதுக்குள்ளாகவே சிறுமிகள் பூப்பெய்தி விடுகின்றனர். 21 வயது வரை திருமணம் செய்யாமல் வீட்டில் வைத்து இருப்பது பெற்றோருக்கு சிரமமாக இருக்கும். எனவே இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்" என்று தெரிவித்தார்.
English Summary
marriage age issue ayyakannu arrest