கல்யாணத்தில்.. கட்டிப்புரண்டு கலவரம் செய்த இளைஞர்கள்.. மணமகளை தூக்கிக் கொண்டு ஓடிய மணமகன்.!
Marriage fight groom lift bride in kanniyakumari
நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் துறை பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், மறவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர்க்கும், திருமணம் நடந்து முடிந்தது. இருப்பினும், விருந்து நடக்கும்போது பிரச்சனை தொடங்கியுள்ளது.
இரவு விருந்து நடைபெற்ற போது மணமகளின் உறவினர்கள் குடிபோதையில் ஆடிக்கொண்டே மணமகன் வீட்டு பெண்கள் மீது மோதியுள்ளனர். இதன் காரணமாக மணமகளின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து குடிபோதையில் ஆடிய இளைஞர்களை ஒன்று கட்டாக தூக்கிக்கொண்டு அப்புறப்படுத்த முயற்சித்தனர்.
அந்த இளைஞர்களை நடத்திய விதம் மணமகள் வீட்டினருக்கு பாத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் அடித்துக் கொள்ள தொடங்கியதால் பிளாஸ்டிக் சேர்கள் திருமண மண்டபத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டது.
இதனால் பயந்து போன மணமகள் திடீரென அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார். அப்போது மயங்கி விழுந்த தன் மனைவியை மணமகன் பாகுபலி போல குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு அங்கிருந்து மருத்துவமனைக்கு சென்று சேர்த்துள்ளார். போலீசாருக்கு தெரிய வர அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Marriage fight groom lift bride in kanniyakumari