சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் முகக்கவசம் கட்டாயம்.! - Seithipunal
Seithipunal


சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் முகக்கவசம் கட்டாயம்.!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்த கொரோனாத் தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு தெரிவித்தது.

அந்த வகையில் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் திங்கட்கிழமை அதாவது 17 ஆம் தேதி முதல் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

நீதிமன்றங்களில் தனி மனித இடைவெளி பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்; வழக்கு பட்டியலில் இல்லாத நிலையில் வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதிமன்ற அறை, நீதிபதிகள் அறை, நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்; நீதிமன்ற அறையின் நுழைவு வாயில் மற்றும் முக்கிய இடங்களில் சானிடைசர் வைக்க வேண்டும்" என்று அதி தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mask compulsary in chennai madurai high courts


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->