மனதை மயக்கும் இடம்.. பார்ப்போரின் கண்களுக்கு விருந்து.. மதிகெட்டான் சோலை.!!
mathikettan shola
மதிகெட்டான் சோலை பழனியிலிருந்து 85கி.மீ தொலைவிலும், கொடைக்கானலில் இருந்து 20கி.மீ தொலைவிலும், பேரிஜம் ஏரியிலிருந்து ஏறத்தாழ 1கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இடமாகும்.
கொடைக்கானலில் அனைத்து சுற்றுலா பயணிகளும் எளிதில் பார்வையிட முடியாத சில சுற்றுலா தலங்களும் இருக்கின்றன. அதில் மதிகெட்டான் சோலையும் ஒன்று.
சிறப்புகள் :
மதிகெட்டான் சோலை பார்ப்பவர்களின் மனதை மயக்குவதாக இருக்கிறது.
இது ஒரு அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு சோலா மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

பரந்து விரிந்த மதிகெட்டான் சோலை, பார்ப்போரின் கண்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கிறது.
அங்கு அடர்ந்து, படர்ந்திருக்கும் மரங்களின் மேற்பகுதி ராட்சத குடை போன்ற அமைப்பை பெற்றிருப்பது, அதன் அழகை அதிகரிக்கிறது.

அந்த குடை போன்ற பகுதியை அவ்வப்போது முத்தமிட்டு செல்லும் மேகக்கூட்டங்களும் கொள்ளை அழகுதான்.
சோலா மரங்களின் மேற்பகுதி பச்சை, இளம்பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு போன்ற நிறங்களில் காண்போரை வசீகரிக்கின்றன. இந்த வனப்பகுதி தென்மலை ஈரக்காடு என்றும் அழைக்கப்படுகிறது.