கன்னியாகுமரி || சிறுமியின் கதை கிழித்த கணக்கு ஆசிரியை - ஆடியோவால் பரபரப்பு.!
maths teacher attack student
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்த மீன்பிடி தொழிலாளியின் மகள் ஒருவர் அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை வகுப்பு முடிந்து அழுதபடி வீட்டுக்கு வந்துள்ளார்.
இதை பார்த்த சிறுமியின் தாயார் அவரிடம் 'ஏன் அழுகிறாய்?' என்று விசாரணை செய்துள்ளார். அதற்கு சிறுமி, வகுப்பில் 6-ம் வாய்ப்பாடை முறையாக சொல்லாததால் கணக்கு ஆசிரியை தன்னை அடித்து துன்புறுத்தி காதை கிழித்ததாகவும், அந்த காயத்தில் மருந்து போட்டு வீட்டுக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தார்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் செய்தார். ஆனால், அவர்கள் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், சிறுமியின் தாயார் இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தில் ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது வைரலானதையடுத்து இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குமரியில் வாய்ப்பாடு சொல்லாததால் சிறுமியின் காதை கணக்கு ஆசிரியை கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
maths teacher attack student