11-ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்தாகிறதா.? அமைச்சர் ஆலோசனை.!  - Seithipunal
Seithipunal


11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வைக்கப்படும் பொது தேர்வு ரத்து செய்வது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றார்.

கடந்த 13ம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தமிழகத்தில் பொது தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. முதல் நாள் நடைபெற்ற தேர்வின் பொழுது 50,000 மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தேர்வு எழுதாமல் சென்று விட்டனர். இது குறித்த விவரங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.

மேலும் நீண்ட நாட்களாக பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வைக்கப்படும் பொது தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து பள்ளி கல்வித்துறைக்கு வலியுறுத்தப்பட்டு வருகின்றது. 

மேற்கண்ட பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு இன்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றார். இந்த ஆலோசனையின் முடிவில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்துக்கான அறிவிப்பை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

May 11 th Public Exam Cancelled


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->