அழகர் இறங்கும் வைபவம்: மதுரை மாவட்டத்திற்கு மே 12–ம் தேதி உள்ளூர் விடுமுறை!
may 12 madurai holyday
மதுரையின் பிரமாண்ட சித்திரைத் திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் வரும் மே 12–ம் தேதி (திங்கள்) நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவில், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மற்றும் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு முக்கிய அம்சமாகும். இந்த நிகழ்வை காண தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவந்தும், பக்தி பரவசத்துடன் கலந்துகொள்வதும் வழக்கம்.
இந்நிலையில், 2025–ம் ஆண்டு வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் மே 12–ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கும் சூழலை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அந்த நாளை உள்ளூர் விடுமுறையாக அறிவித்துள்ளது.
அத்துடன், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் விடுமுறையில் இயங்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்குப் பதிலாக ஏதேனும் முக்கிய வேலைகள் உள்ளவர்கள் மே 25 அல்லது பிற திருத்திய தேதியில் பணியாற்ற திட்டமிடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.