புதஅதிமுக, அதிமுக! தீவிர ஆலோசனையில் ஓபிஎஸ்!
May be OPS Start New Party soon
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே அங்கீகரித்துள்ள நிலையில், கடந்த வாரம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து, தீர்மானங்கள் செல்லும் என்ற உத்தரவையும் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மேலும், கடந்த 20ம் தேதி மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில், எடப்பாடி பழனிச்சாமி தான் ஒரு வலிமையான தலைவர் என்பதை நிரூபித்து உள்ளதாக, அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில், தற்போது நீதிமன்ற தீர்ப்பு, சட்டரீதியாகவும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஒற்றை தலைமையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
நிலைமை இப்படி இருக்க, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபன்னீர்செல்லத்தின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது, அவரின் ஆதரவாளர்களும் சற்று கலக்கத்தில் உள்ளனர்.
என்னதான் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வழங்கி வந்தாலும், அவர்கள் அதிமுகவில் இணைவதற்கு உண்டான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
கூடிய விரைவில் ஓ பன்னீர்செல்வத்தின் கூடாரம் காலி ஆகிவிடும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் தனது பலத்தை நிரூபிக்கவும், தனது ஆதரவாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புதிதாக ஒரு கட்சியை தொடங்க உள்ளதாக அவரின் நெருங்கிய வட்டாரத்தில் பேச்சு அடிப்பட தொடங்கியுள்ளது.
மீண்டும் அதிமுகவில் இணைவது எந்த வகையிலும் சரிப்பட்டு வராது என்பதை ஓபிஎஸ் முழுமையாக உணர்ந்தே, புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக வெளியான அந்த தகவல் நமக்கு தெரிவிக்கின்றது.
தற்போது இருக்கும் அதிமுக கொடியில் சில மாற்றங்களை செய்து, அம்மா திராவிட முன்னேற்ற கழகம் அல்லது புரட்சித்தலைவி அம்மா திமுக ஆகிய பெயர்களில் கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது வரை ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக உள்ளவர்களுக்கு 82 மாவட்ட செயலாளர்கள் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், எம்எல்ஏ, எம்பி என்று கணிசமான ஆதரவாளர்களை கொண்டுள்ள ஓபிஎஸ், புதிய கட்சியை தொடங்கினால்தான் அவர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
இல்லையென்றால் ஒன்று அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணையலாம் அல்லது அதிமுகவில் மீண்டும் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்ற செய்திகள் அடிபடுகின்றன.
அதே சமயத்தில் திமுகவும், பாஜகவும் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை எல்லாம் கணக்கில் வைத்து தான் ஓபிஎஸ் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
English Summary
May be OPS Start New Party soon