மயிலாடுதுறை | பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளர்களின் கதி என்ன?
Mayiladuthurai firecracker factory explosion four youth death
மயிலாடுதுறை, பொறையாறு அருகே உள்ள கிராமத்தில் மோகன் என்பவர் சொந்தமாக பட்டாசு ஆலை வைத்து நாட்டு வெடிகுண்டுகள், திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் வெடிகள், தீபாவளி பட்டாசுகள் போன்றவற்றை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.
அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை என்பதால் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்தது. இந்த ஆலையில் 11 பேர் பணியாற்றுவர்.
நேற்று பட்டாசு தயாரிக்கும் பணியில் 8 பேர் ஈடுபட்டிருந்த போது மாலை சுமார் 3 மணியளவில் திடீரென பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதனால் அந்த குதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இந்த விபத்தினால் பட்டாசு ஆலை கட்டிடமும் இடிந்து தரவட்டமானது. இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசு தொழிற்சாலையில் இருந்த தொழிலாளர்களை மீட்க முயற்சித்தனர்.
அப்போது 4 வாலிபர்களின் உடல் பாகங்கள் 500 மீட்டர் தூரம் வரை பல்வேறு இடங்களில் சிதறி கிடந்தன. இந்த விபத்து தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தரங்கம்பாடி தீயணைப்பு வீரர்கள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெடி விபத்தில் உயிரிழந்த 4 வாலிபர்களின் உடல்களை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் (வயது 32), மூவலூர் கிராமத்தைச் சேர்ந்த மதன் (வயது 21) சித்தர்காட்டைச் சேர்ந்த நிகேஷ் (வயது 22) இவர் கல்லூரி மாணவர் ஆவார். ராகவன் (வயது 22) என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வெடி விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பட்டாசு அலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mayiladuthurai firecracker factory explosion four youth death