அம்மா உணவகங்களை மூட நிலைக்குழு பரிந்துரை! மேயர் பிரியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Mayor Priya said action will be taken loss making Amma restaurants
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் இரண்டாவது நாளாக மேயர் ப்ரியா தலைமையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் மொத்தம் 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் அம்மா உணவகம் குறித்தான அறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையில் சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்கள் ரூ.786 கோடி அளவிற்கு நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா "அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில் தான் இருக்கும். அம்மா உணவகம் தொடக்கத்தில் எவ்வாறு செயல்பட்டதோ இனி அவ்வாறே தொடரும்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்படாத நிலையில் உள்ள அம்மா உணவகங்கள் ஆய்வு செய்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நாளொன்றுக்கு 500 ரூபாய்க்கு கீழ் வருமானம் வரும் அம்மா உணவகங்களை மூடுமாறு கணக்கு நிலைக்குழு தலைவர் பரிந்துரைத்துள்ளார்.
அந்த பரிந்துரையின் மீது ஆய்வு செய்து உரிமைய நடவடிக்கை எடுக்கப்படும்" என மாமன்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வருமானம் குறைவாக உள்ள அம்மா உணவகங்கள் மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
English Summary
Mayor Priya said action will be taken loss making Amma restaurants