மதிமுக நகர செயலாளர் மகன் கல்லால் அடித்து கொலை! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் தீபம் மோகன். மதிமுக நகர செயலாளர், ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவராகவும் செயல்பட்டு வருவதுடன் புதிய பேருந்து நிலையம் அருகே ஸ்வீட் ஸ்டாலும் நடத்தி வருகிறார். 

தீபம் மோகன் -க்கு அருள்பிரகாஷ்(48) என்ற மகன் உள்ளார். இவர் தந்தையுடன் ஸ்வீட் ஸ்டாலை கவனித்து வந்தார். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் உள்ள மோகனுக்கு சொந்தமான இடத்தில் திருத்துறைப்பூண்டி பழைய காவல் நிலையம் இயங்கியது. தற்போது அந்த காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டு சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் மோகன் இடம் அருகே சிங்களாந்தியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் லேத் பட்டறை நடத்தி வந்தார். இவர் இரண்டு மாதத்துக்கு முன் இறந்து விட்டார். இதனால் அந்த பட்டறையை ஆறுமுகம் மகன் ராம்(20) நடத்தி வருகிறார். ராமுக்கும், மோகனுக்கும் இடையே இடத்தகராறு இருந்து வந்துள்ளது. 

இதுதொடர்பாக ராமுக்கும், அருள் பிரகாசுக்கும் நேற்று மதியம் மீண்டும் இடத்தகராறு ஏற்பட்ட நிலையில் ராம், அவரது பெரியப்பா முருகேசன் மகன் விக்னேஸ்வரன்(28) மற்றும் சிலர் சேர்ந்து அருள் பிரகாசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் செங்கல்லால் தாக்கியுள்ளனர். 

இதில் அருள் பிரகாஷ் தலையில் படுகாயமடைந்து மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராம் மற்றும் விக்னேஸ்வரனை இன்று காலையில் கைது செய்தனர். மேலும் இரண்டு நபரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MDMK city secretary's son stoned to death Police investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->