காதலுக்கு எதிர்ப்பு... மருத்துவ கல்லூரி மாணவி விபரீத முடிவு... அதிர்ச்சியில் பெற்றோர்..!
Medical College girl commits suicide in chennai
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் லித்திகா(22), போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் லித்திகா பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த லித்திகாவின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மனவேதனையடைந்த லித்திகா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற லித்திகா, எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் பாட்டி வீட்டிற்குச் சென்ற லித்திகா எலி மருந்து சாப்பிட்டது குறித்து கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக லித்திகாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லித்திகா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Medical College girl commits suicide in chennai