மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தில் கைது! தமிழக அரசு பரிசீலனை! - Seithipunal
Seithipunal



விதிகளுக்கு புறம்பாக மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிசீலனை செய்து வருவதாக, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் கேரளா உள்ளிட்ட பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

இதனை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பி. செந்தில்குமார் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அவரின் அந்த மனுவில், மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது, தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், விதிகளுக்கு புறம்பாக மாவட்ட எல்லைகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிசீலனை செய்வதாக, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

மேலும், தமிழ்நாடு மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Medical Waste issue TNGovt Info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->