தர்மபுரி || விவசாய கிணற்றில் கொட்டபட்ட மருத்துவ கழிவுகள் - கொந்தளிப்பில் கிராம மக்கள்.!!  - Seithipunal
Seithipunal


விவசாய கிணற்றில் கொட்டபட்ட மருத்துவ கழிவுகள் - கொந்தளிப்பில் கிராம மக்கள்.!! 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவாடி அருகே தனியாருக்கு சொந்தமான விளைநிலத்தில் உள்ள பயன்பாடற்ற கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணறில் நேற்று  சிலர் லாரியிலிருந்து மர்ம பொருட்களை கொட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து துர்நாற்றம் வீசியதால் அவ்வழியே சென்ற கிராம மக்கள் விசாரித்துள்ளனர்.

அதில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயோ கழிவுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களை கொட்டி வந்தது தெரிய வந்தது.  இதைக்கேட்டவுடன் சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் அப்பகுதியில் திரண்டு வாகனங்களை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய பின்னர் மருத்துவக் கழிவுகளை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்வதாகவும், கிணற்றில் கொட்டிய கழிவுகளை அகற்றி விடுவதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது, மருத்துவக் கழிவுகளைக் கொட்டப்பட்ட பகுதியைச் சுற்றி விளை நிலங்கள் அதிகம் உள்ளன. அதில், விவசாயிகள் பலரும் சாகுபடிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், இப்பகுதியைச் சுற்றி குடியிருப்புகளும் அதிக அளவில் உள்ளன.

மருத்துவக் கழிவுகள் இவ்வாறு கொட்டப்பட்டால் நிலத்தடி நீர் மிகவும் பாதிப்படையும். எனவே, அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து கிணற்றில் ஏற்கனவே கொட்டப்பட்ட மொத்த மருத்துவ கழிவுகளையும் அகற்ற வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் இதுபோன்று வேறு எங்கும் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

medical westage dumped well in dharmapuri


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->