உறுப்பினர் சேர்க்கை படிவம்.. மாநில அமைப்பாளர் சிவாயிடம் வழங்கினர்!
Membership Form Presented to the state organizer Sivay
நெல்லித்தோப்பு தொகுதி திமுக மகளிர் மற்றும் தொண்டர் அணி நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை மாநில கழக அமைப்பாளர் இரா. சிவா அவர்களிடம் வழங்கினர்.
புதுச்சேரி, நெல்லிதோப்பு சட்டமன்றத் தொகுதிக்கழக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி உறுப்பினர் சேர்த்தல் பணியை முடித்து ஆயிரம் மகளிர் உறுப்பினர்களை சேர்த்து அதற்குரிய படிவத்தை தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் தொகுதி செயலாளர் நடராஜன் பொதுக்குழு உறுப்பினர் வேலவன் ஆகியோரது முன்னிலையில் வழங்கினார்.
தொகுதி மகளிர் அணி அமைப்பாளர் மங்கையர்க்கரசி, தொண்டரணி அமைப்பாளர் ராணி ஆகியோர் மாநிலக் கழக அமைப்பாளரும் எதிர்கட்சித்தலைவருமான இரா.சிவா அவர்களிடம் வழங்கினார்கள்.
அச்சமயம், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் அமுதா குமார், நர்கீஸ், மகளிர் அணி தலைவி சந்திரகலா, மகளிரணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த், தொண்டரணி அமைப்பாளர் சுமதி, துணை அமைப்பாளர் தேன்மொழி, நெல்லித்தோப்பு தொகுதி மகளிர் துணை அமைப்பாளர்கள் சுனிதா, சாமுண்டீஸ்வரி, ஹெலன் மேரி, செல்வி, ஆஷா, வள்ளியம்மை, சின்னப்பொண்ணு, விஜயலட்சுமி, கலா, தேவகி, தொகுதி துணை செயலாளர் சங்கீதா மற்றும் கிளை செயலாளர் லட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.
English Summary
Membership Form Presented to the state organizer Sivay