கன்னியாகுமரி : பாட்டியை கொன்று எரித்துவிட்டதாக கூறி போலீசாரையே பதறவைத்த மனநோயாளி.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி : பாட்டியை கொன்று எரித்துவிட்டதாக கூறி போலீசாரையே பதறவைத்த மனநோயாளி.!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் காவல் நிலையத்திற்கு வாலிபர் ஒருவர் வந்து, கருங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூட்டேற்றி பகுதியில் தனக்கு சொந்தமாக மாந்தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு ஒரு பாட்டி, மாங்காய் பறிப்பதற்காக வந்தார். 

அவரை நான் கல்லால் அடித்துக் கொன்றுவிட்டேன். அதனால் தான் சரண்டர் ஆக வந்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு அந்த வாலிபரை அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு சடலம் எதுவும் இல்லை.

இது தொடர்பாக போலீசார் அந்த வாலிபரிடம், கேட்ட போது அவர் பாட்டியின் சடலத்தைத் தான் எரித்துவிட்டதாகச் சொன்னார். இது தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதும், அந்த வாலிபர் ஒரு மனநோயாளி என்பதும் தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். சமீபத்தில் இதே கருங்கல் காவல் நிலையத்தில் மற்றொரு மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தலைமை ஆய்வாளரின் ஆய்வு வாகனத்தையே திருடிப்போய், நடுவழியில் நிறுத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mental patient said kill and burned grand mother in karungal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->