அடையாறு ஆற்றின் கீழ் மெட்ரோ சுரங்க பாதை! கூடுதல் தகவல் அளிக்க அறிவுறுத்தல்! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை பணியானது ரூ.63,200 கோடி ரூபாய் செலவில் 119 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்பொழுது மாதாவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மெட்ரோ தடத்தில் சுரங்க தோண்டும் இயந்திரம் மூலம் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த சுரங்கப்பாதை அடையாறு மற்றும் பங்கிங்காம் ஆறுகள் வழியாக சுரங்கம் அமையும் படி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 59 மீட்டர் பங்கிங்காங் கால்வாயிலும், 666 மீட்டர் அடையாறிலும், இந்திரா நகரில் பங்கிங்காங் கால்வாயில் 1220 மீட்டர் நீளம் என மெட்ரோ சுரங்கப்பாதை செல்கிறது.

இதற்கான அனுமதியை பெற மெட்ரோ ரயில் சார்பில் மாநில கடலோர மேலாண்மை ஆணையத்திற்கு விண்ணப்பித்தனர். இதற்கான ஒப்புதல் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் மெட்ரோ ரயில் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைஅடுத்து நிபுணர் மதிப்பிட்டு குழுவினர் நீருக்கு அணியில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களில் வெள்ள தடுப்பு திட்டம், சுரங்கம் அமைக்கும் பொழுது வெள்ள மேலாண்மை திட்டம், மண் சரிவு ஏற்பட்டால் செய்யக்கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள், அதிர்வு மேலாண்மை திட்டம் போன்றவற்றின் கூடுதல் தகவலை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாணயம் கேட்டுள்ள கூடுதல் தகவல்களை பெற்றோர் நிர்வாகம் அளித்த பின்பு சுரங்கம் தோண்டும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Metro tunnel under Adyar river


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->