சென்னையில் குடிநீர் தட்டுப்பாடா? இல்லவே இல்லை.. அடித்து சொல்லும் மெட்ரோ வாட்டர்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் நேற்று குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டதால் கோயம்பேடு முதல் பாடி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித தங்கு தடையுமின்றி குடிநீர் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ வாட்டர் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகிய 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது.

அவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட நீர் 111 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது என சென்னை மெட்ரோ வாட்டர் விளக்கம் அளித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metro water explain no drinking water shortage in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->