கருகும் நெற்பயிர்கள்... மேட்டூர் அணை திறப்பு: போராட்டத்திற்கு நாள் குறித்த பொதுச்செயலாளர்!  - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்ட ஆட்சியரை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் நேரில் சந்தித்து டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

பின்னர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகுகிறது. காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக முடிவு எடுக்க தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றும் நடவடிக்கை. 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நான்கு மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையை ஏற்று மேட்டூர் அணை திறப்பதையும் அடைப்பதையும் வாடிக்கையாக பின்பற்றப்படுகிறது. 

கருகி வரும் பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையை உடனடியாக திறக்க நீர்ப்பாசன துறை முன் வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்ற 3 ஆம் தேதி காலை 9 மணியளவில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற 4 மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettur dam opening immediate BR pandiyan announcement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->