தொடர் கனமழையால் எகிரும் மேட்டூர் அணை!...இன்று அணையின் நீர்மட்டம் 104.76 அடியாக உயர்வு! - Seithipunal
Seithipunal


காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில், காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக கடந்த வாரம் டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

இதற்கிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் விடிய விடிய பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

தொடர் நீர்வரத்து அதிகரிப்பால், அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.40 அடியாக உயர்ந்து காணப்பட்டது.

இந்த நிலையியில், மேட்டூர் அணையில்  நேற்று வினாடிக்கு 31 ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில், இன்று 33 ஆயிரத்து 148 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.76 அடியாக உயர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettur dam overflows due to continuous heavy rains the water level of the dam has risen to 104 and 76 feet today


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->