தொடர் கனமழை: ஒரே நாளில்... மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 55.12 அடியாக அதிகரித்துள்ளது. கேரளா, வயநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி அணை நிரம்பியுள்ளதால் பாதுகாப்பு கருவி கடந்த சில நாட்களாக உபரி நீர் காவிரியில் திறக்கப்படுகிறது. 

உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 3102 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 40 ஆயிரத்து 018 கணவரியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று காலை 55.12 அடியாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 

ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 5.09 அடி ஆக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுபவதால் நீர் இருப்பு 21.18 டி.எம்.சியாக உள்ளது. 

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் நான்காவது நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கபடுவதால் பாலாறு, செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettur dam water level increase


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->