தொடர் கனமழை... ஒரே நாளில் 2.97 அடி உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்.!
Mettur dam Water level increase
காவிரியில் நீர் பிடி பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக ஒரே நாளில் மேட்டூர் அணையில் 2.25 கனஅடியாக நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கர்நாடகா காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரளா வயநாட்டிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணையின் நீரின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 5054 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை 16,577 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 20,910 கன அடியாக அதிகரித்துள்ளதால் ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2.97 அடியாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக செட்டிப்பட்டி, கோட்டையூர் ,பனவாடி துறைகளில் படகு மற்றும் பரிசல் போக்குவரத்து இரண்டாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
English Summary
Mettur dam Water level increase