சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க வில்லை - மேயர் பிரியா பரபரப்பு குற்றச்சாட்டு.!
meyar priya allegs central government not provide 350 crore to chennai corporation
நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சிக்கான நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று இந்த பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதில், பாஜக மாமன்ற உறுப்பினர் பேசும் போது சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் என்பது நிதி பற்றாக்குறையில் உள்ள பட்ஜெட்டாக இருக்கிறது என்று பேசினார்.
அதிலும் குறிப்பாக சொத்து வரி உள்ளிட்ட வரிகள் நிதி பற்றாக்குறையில் உள்ள பட்ஜெட்டாக காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இதற்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பதில்ளித்தார். மத்திய அரசு சார்பில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்தினால் மட்டுமே சென்னைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகின்றனர். சொத்து வரியை ஆண்டு தோறும் 6 சதவீதம் உயர்த்துவதால் பொது மக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
இருப்பினும், சென்னை மாநகராட்சி சார்பில் சொத்து வரி 6 சதவீதம் உயத்தப்பட்டு அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் கூட தற்போது வரை சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய ரூ. 350 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை.
இதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் நிதி பற்றாக்குறையான ஒரு பட்ஜெட்டை அமைப்பதற்கான சூழல் உள்ளது. மத்திய அரசு சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க வில்லை. உங்கள் கட்சி சார்பாக நீங்களே அதனை பெற்று தர வேண்டும் என்று தெரிவித்தார்.
English Summary
meyar priya allegs central government not provide 350 crore to chennai corporation