இன்றைய வரலாறு.. தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினம்!
MGR birthday special
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்.
இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். மேலும், இவர் 1977ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை தொடர்ந்து 3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.
சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பிறகு அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
1960ஆம் ஆண்டு இவர் 'பத்மஸ்ரீ விருதுக்காக" தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டார். இவர் பாரத ரத்னா விருது, அண்ணா விருது, வெள்ளியானை விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மறைந்தார்.