'டீ மேட்' என்ற பெயரில் மீண்டும் வழக்கத்திற்கு வரும் பால்...!
Milk is coming back to normal under the name of 'Tea Mate'...!
ஆவின் நிறுவனம் மூலம் நாள்தோறும், 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பால், கொழுப்பு சத்து அடிப்படையில், மூன்று தரங்களாக பிரிக்கப்பட்டு, ஆரஞ்ச், பச்சை, நீல நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், ஆவின் பாலின் விலை லிட்டருக்கு, மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. அதன்படி, ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் 500 மி.லி., 24 ரூபாய்க்கும், பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய்க்கும், நீல நிற பாக்கெட் 21 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில், தனியார் பால் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் பால், 500 மி.லி., 34 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொது மக்கள் மட்டுமின்றி ஹோட்டல்கள், 'கேன்டீன்'கள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றின் தேவைக்கு, ஆவின் பால் அதிகளவில் வாங்கப்படுகிறது.
ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் கொள்முதல் குறைந்துள்ளது. ஆவின் நிறுவனம் விலை குறைப்பால், நஷ்டத்தில் சிக்கியுள்ளது. எனவே, ஆவின் நிறுவனத்தின் நஷ்டத்தை தவிர்ப்பதற்கு, புதிய முயற்சி எடுக்கப்படவுள்ளது.
அதன்மூலம், வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்காக 'டீ மேட்' என்ற பெயரில், ஒரு லிட்டர் பால் பாக்கெட் விற்பனைக்கு வரவுள்ளது. இது ஏற்கனவே, பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
தற்போது, மீண்டும் 'டீ மேட்' என்ற பால் விற்பனைக்கு வரவுள்ளது. ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் விலையை விட, மிக அதிக விலையில் இந்த பால் விற்பனை செய்யப்பட உள்ளது.
English Summary
Milk is coming back to normal under the name of 'Tea Mate'...!