பட்டப்பகலில் பேருந்து ஓட்டுநர் வெட்டிக் கொலை - தஞ்சாவூரில் பயங்கரம்..! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டையில் மினி பேருந்து ஓட்டுநர் சிவா என்பவர் பயணிகள் கண்முன்னரே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தில் பயணிகள் காத்திருந்த நிலையில் ஓட்டுநர் சிவா டீ குடித்துவிட்டு பேருந்தை இயக்க சென்றுள்ளார். அப்போது, முகமூடி அணிந்து வந்த கும்பல் ஓட்டுனர் சிவாவை பயணிகள் கண் எதிரே சராமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது.

பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து ஓட்டுனரின் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைதொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர் சிவாவின் உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியதன் பேரில் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்துச் சென்றனர். பட்ட பகலில் பயணிகள் முன்பு மினி பேருந்து ஓட்டுனரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mini bus driver murder in thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->