ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் சிறப்பு தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு மிதிவண்டியை வழங்கினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அவர் தெரிவித்ததாவது:- 

"கொரோனா பாதிப்பில் இருந்து நாம் முழுமையாக மீண்டு வந்து விட்டதாக சொல்லமுடியாது. இந்தியாவில் டெல்லி, மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நாள்தோறும் 500 என்ற அளவில்தான் கொரானா தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. 

இருப்பினும், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. மத்திய அரசின் இலவச பூஸ்டர் தடுப்பூசி முகாம் செப்டம்பர் 30-ந்தேதியுடன் முடிவடையும் நிலையில், அதன் பிறகு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். 

எனவே, தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முழுவதும் தொடர்ச்சியாக வாரத்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் 4 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. எனவே மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும்." என்று அவர் தெரிவித்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister advised the people


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->