விரைவில் முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணி நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வேட்பாளர்பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, "தமிழகம் முழுவதும் முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்வதற்கு 2 ஆயிரத்து 222 பேர் டி.ஆர்.பி. தேர்வு எழுதி காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister anbil magesh press meet in vikravandi by election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->