பொதுத்தேர்வு தேதி மாற்றப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட வினா வங்கி புத்தகங்களை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் "தென் மாவட்டங்களில் பெய்தது வரலாறு காணாத மழைபெய்துள்ளது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வந்த நேரதத்தில் மாணவர்களின் பாடப்புத்தகங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் பாடப்புத்தகங்கள் மீண்டும் வழங்கிய பிறகே தேர்வு நடத்தினோம்.

கனமழையால் எத்தனை பள்ளிகள் சேதமடைந்துள்ளது. எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு முடிந்த பின் பாடபுத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கும். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் எடுத்த முடிவு போலவே, தென் மாவட்டங்களுக்கும் எடுப்போம்.

பொதுத்தேர்வில் எந்த தேதி மாற்றமும்இல்லாமல் ஏற்கனவே அறிவித்தபடியே நடைபெறும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இயல்பு நிலை வந்த பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும். நெல்லையில் பள்ளிக்கல்வி அலுவலகமே நீரில் மூழ்கிவிட்டது" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Anbil Mahesh said no changes in school public exam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->