கோவை கிணத்துக்கடவு மாணவி விவகாரம்: நாங்கள் இருக்கிறோம். இருப்போம் - அமைச்சர் அன்பில் மகேஷ்!
Minister Anbil Mahesh kovai school student issue
கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பில் படிக்கும் மாணவி பூப்பெய்தததால், கடந்த 5ம் தேதி தேர்வு அறைக்கு வெளியே தேர்வு எழுத வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
முதல் மாதவிலக்கின் காரணம் காட்டி, மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியே அமர வைத்து தேர்வெழுத வைத்த சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ பல விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் நேரில் பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கையில், "தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Minister Anbil Mahesh kovai school student issue