ஆளுநர் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று நாகை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அதன் படி அவர் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதையடுத்து தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். இந்த நிலையில் ஆளுநர் பங்கேற்றுள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார். 

இதேபோல், பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் பெயர் இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரும் பங்கேற்கவில்லை. இதற்கிடையே, வேதாரண்யம் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்புத் தெரிவித்தனர். 

அதாவது, தமிழக அரசின் நலன் சார்ந்த கோப்புகளில் கையொப்பமிடாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக கைப்பாவையாக ஆளுநர் செயல்படுவதை கண்டித்தும் ராஜாஜி பூங்கா எதிரே கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister anitha radhakrishnan avoide governor programme


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->