இந்தியாவிலேயே... அதிக ஓட்டு வித்தியாசத்தில் இவர்தான் வெற்றி பெறுவார் - அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி.! - Seithipunal
Seithipunal


தமிழக மீன்வள மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்m அவரது மனைவி உடன் சொந்த ஊரான உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் இன்று காலை 7:20 மணியளவில் வாக்கு பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டங்கள் செயல்பாடுகளால் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெறும். 

தூத்துக்குடி தொகுதி எம்.பி. ஆக இருந்த கனிமொழி, மீண்டும் எனது 2 வது தாய் வீடு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறேன் என தெரிவித்துள்ளார். 

அவரது மக்கள் பணி, செயல்பாடுகள், திறமைகள் போன்றவை அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. அதனால் இந்தியாவிலேயே அனைத்து எம்.பிகளையும் விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி எம்.பி. வெற்றி அடைந்து சாதனை படைப்பார் என்பது உறுதி என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Minister Anitha Radhakrishnan speech


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->