என் படிப்புக்கு லேப்டாப் வேணும்”- மனு கொடுத்த மாணவிக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் பகுதியை சேர்ந்த அந்தோணி பிச்சையின் மகள் ஆஷா. பி.டெக். படித்து வரும் இவர், உயர்கல்விக்கு உதவியாக லேப்டாப் வாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில், திருச்செந்தூரில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காரில் சென்று கொண்டிருந்தார்.

இதற்கிடையே, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடைக்கலாபுரம் பகுதியில் சாலையோரம் உள்ள ஒரு டீக்கடையில் தேநீர் அருந்துவதற்காக காரை நிறுத்திவிட்டு தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அந்தோணி பிச்சையின் மகள் ஆஷா, அமைச்சர் அமர்ந்திருப்பதை பார்த்து விட்டு உடனடியாக ஒரு வெள்ளை பேப்பரில் தனது உயர் படிப்புக்கு லேப்டாப் தேவை என்பதை தெரிவித்து, அதற்கு உதவி செய்யுமாறு 4 வரியில் கோரிக்கையை எழுதி அந்த மனுவை அமைச்சரிடம் வழங்கினார்.

இந்த மனுவை வாங்கிய அமைச்சர் உடனடியாக மாணவியிடம் படிப்பு விவரத்தை கேட்டறிந்து, லேப் டாப் வாங்குவதற்காக அந்த நொடிப்பொழுதிலேயே ரூபாய் 75 ஆயிரம் பணத்தை மாணவி ஆஷாவிடம் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

மாணவி ஒருவர் படிப்புக்காக லேப்டாப் வாங்க முடியாமல், கோரிக்கை மனுவை கொடுத்த நிலையில், சிறிதும் தாமதிக்காமல் உதவிசெய்த அமைச்சரின் செயல் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister anitha rathakrishnan 75 thousand to student for buy laptop in thiruchenthur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->