விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் திட்டம் அமைச்சர் அறிவிப்பு !! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையை இந்த ஆண்டு திறக்க முடியாதது குறித்து கவலை தெரிவித்த வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், டெல்டா பகுதி விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க ரூ.78.67 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்தார்.

பருவமழை தாமதம் மற்றும் நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையை இந்த வருடம்  திறக்க முடியவில்லை. வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம், ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, 3.85 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,000 டன் நெல் விதைகள் வழங்கப்படும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நெல் நாற்றுகளை இயந்திரங்கள் மூலம் நடவு செய்வதற்கு ஏக்கருக்கு 4,000 ருபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது. மொத்தம் ஒரு லட்சம் ஏக்கருக்கு இந்த மானியம் கிடைக்கும், இதற்காக ரூ.40 கோடி அரசாங்கம் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

மண்ணில் சத்து இல்லாத 7,500 ஏக்கருக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நுண்ணூட்டச்சத்துக்கள் வழங்கப்படும். காப்பர் சல்பேட் கொண்ட உரம் பயன்படுத்த, 25,000 ஏக்கருக்கு ரூ.62.5 லட்சம் என்ற விகிதத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.250 வழங்கப்படும். இதுமட்டுமில்லாமல், 25,000 ஏக்கரில் ஜிப்சம் பயன்படுத்த, 62.50 லட்சம் ரூபாய் தரப்படும்.

குறுவை சாகுபடியின் கீழ் 10,000 ஏக்கரில் பயறு வகைகளை பயிரிட தரமான விதைகள் மற்றும் உரங்கள் வழங்க ரூ.1.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் 10,000 ஏக்கரில் பயறு வகைகளில் விளைச்சலை அதிகரிக்க நுண்ணூட்டச்சத்துக்கள் வழங்க ரூ.20 லட்சம்ஒதுக்கப்பட்டுள்ளது.

 விவசாயத்திற்கு பல்வேறு வேளாண் உபகரணங்கள் வழங்க ரூ.7.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு வேளாண் வேலை இழப்பை ஈடுகட்ட ரூ.24.50 கோடியை தமிழகஅரசு ஒதுக்கி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister announced a plan to make farmers happy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->