நான் இதில் கில்லாடி - அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசியாவது:-

“எனக்கு ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. கலைஞர்தான் என்னை போட்டியிடச் சொன்னார். என்னிடம் தேர்தலுக்கு பணம் இல்லை என சொன்னபோது கலைஞரும், அண்ணியாரும் பணம் கொடுத்து உதவினார்கள். ஆரம்பத்தில் ஆசை எனக்கு வரவில்லை. 

ஆனால் ஆசை வந்த பிறகு இந்த இடத்தில் நிலைத்து நிற்கிறேன். இன்று வரை பேசுகிறேன். ஆகையால் இப்போதும் சொல்கிறேன்... 12 முறை என்னை வெற்றி பெறச் செய்தீர்கள், 13-வது முறையும் என்னை வெற்றி பெறச் செய்வீர்கள்.

வாழ்வும், சாவும் என்னை ஒன்னும் பண்ணாது. துரைமுருகன் இதில் கில்லாடி. தேர்தலில் டாக்டர் பட்டம் வாங்கியவன் நான். 26 தேர்தல்களை சந்தித்திருக்கிறேன். ஆகையால் என்னிடம் வேண்டாம்” என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister durai murugan speech in candidate into meeting in arakonam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->