அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!! - Seithipunal
Seithipunal


தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் துரை ராமலிங்கத்தின் மகள் பாரதி தனது கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் காட்பாடி காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தார். பாரதியின் கணவர் ராஜ்குமார் காட்பாடி பகுதியில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் லத்தேரி ரயில்வே கேட் அருகே பாரதி அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரயில்வே போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பாரதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Duraimurugan nephew committed suicide on railway track


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->