அமலாக்கத்துறை சோதனை பழகிப்போனதுதான்.. இந்தக் கதைக்கெல்லாம் நான் ஆள் இல்லை - அமைச்சர் துரைமுருகன்.! - Seithipunal
Seithipunal


அமலாக்கத்துறை அதிகாரிகள் வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர்ஆனந்த் எம்.பி. வீட்டில் 2 நாட்களாக சோதனை நடத்தினர். இந்த நிலையில் அமைச்சர் துரை முருகன், சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். 

டெல்லி சென்ற அமைச்சர் துரைமுருகன் தமிழக அரசின் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்த பின்னர் அவர், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆகியோரை சந்தித்து சட்ட ஆலோசனை பெற்றார்.

இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் இருந்து நேற்றிரவு 8 மணியளவில் விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு திரும்பினார். இந்த நிலையில் அமலாக்கத்துறை சோதனைக்கும், டெல்லி பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- "இலாகா தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக தான் டெல்லி சென்றிருந்தேன். அமலாக்கத்துறை சோதனை பழகிப்போனதுதான். நீங்கள் எழுதியிருக்கும் கதைக்கெல்லாம் நான் ஆள் இல்லை. அமலாக்கத்துறை சோதனைக்கும், டெல்லி பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister duraimurugan press meet about enforcement department raide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->