சூதாட்டத்தை சட்டம் போட்டு தடுத்தால் திட்டம் போட்டு நடத்துகிறார்கள் - துரைமுருகன் பரபரப்பு பேட்டி.!
minister duraimurugan pressmeet
'எது நடந்தாலும், சி.பி.ஐ., விசாரணை கேட்பது பேஷனாகி விட்டது' என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துரைமுருகன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- "கர்நாடகாவில், மூன்று அணைகளில் தண்ணீர் முழுதும் நிரம்பினால் அவர்கள் திறந்து விட்டுதான் ஆக வேண்டும். எல்லா அணையும் கர்நாடகாவில் நிரம்பப்போகிறது.
அதனால், தமிழகத்திற்கு தண்ணீர் வரும். சென்னையை சுற்றி புதிதாக, ஏழு நீர்நிலைகள் உருவாக்கப்பட உள்ளன. இவற்றின் வாயிலாக நீர் சேமிக்கப்படும். எது நடந்தாலும், சி.பி.ஐ., விசாரணை கேட்கின்றனர். கள்ளச்சாராயம் சாவு, ஆம்ஸ்ட்ராங் கொலை என எல்லாவற்றுக்கும் கேட்கின்றனர்.
இப்படி கேட்பது இப்போது பேஷனாகி விட்டது. எல்லா நாட்களிலும், எல்லா ஆட்சியிலும் கொலை நடந்து கொண்டு தான் இருக்கிறது. முன்விரோதம் காரணமாகவே அதிக கொலைகள் நடக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தை சட்டம் போட்டு தடுக்கிறோம். ஆனால், திட்டம் போட்டு நடத்துகின்றனர். என்ன செய்வது? என்று அவர் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள் தரப்பில், 'அ.தி.மு.க.,வில் ஆக., 15ம் தேதிக்குள், பன்னீர்செல்வத்தையும்; சசிகலாவையும் சேர்க்க வேண்டுமென, பா.ஜ.க மிரட்டுவதாகக் கூறப்படுகிறதே' என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த துரைமுருகன், ''அது வெளிநாட்டு செய்தி; அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது,'' என்றுத் தெரிவித்தார்.
English Summary
minister duraimurugan pressmeet