செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது! கூடுதல் தண்ணீர் வந்தாலும் தாங்கும்! - அமைச்சர் துரைமுருகன்! - Seithipunal
Seithipunal


சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் என்று பார்வையிட்டார். அவருடன் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் சென்று பார்வையிட்டனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செம்பரம்பாக்கம் ஏரி ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுவதால் நீர் வரத்திற்கு ஏற்ப நீர் திறப்பும் இருக்கும் என தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் "செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 3675 கன அடி நீர் வருகிறது. ஆனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 10,046 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடியில் தற்பொழுது 22.5 அடி நீர் தேங்கியுள்ளது. இன்னும் அதிக அளவு மழை நீர் வந்தாலும் தாங்க கூடிய அளவிற்கு செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. 

காரணம் செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில் 2,786 கன அடி நீர் தற்பொழுது தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் அதிகளவு மழை நீர் வந்தாலும் தாங்க கூடிய சக்தி செம்மரம்பாக்கம் ஏரிக்கு உள்ளது. இன்னும் அதிகரிப்படியான மழைப்பொழிவு உள்ளதாக தெரிய வருகிறது. அதற்கு ஏற்றார் போல் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், வானிலை முன்னெச்சரிக்கை இவற்றை அடிப்படையாகக் கொண்டு வினாடிக்கு வினாடி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீர் ஐந்து கிராமங்கள் வழியாகச் சென்று அடையாற்றில் போய் கலக்கிறது. கால்வாயிகளின் இருபுறமும் கரைகள் உறுதியாக கட்டப்பட்டுள்ளதாலும், குன்றத்தூர் பகுதியில் கால்வாய்கள் அகலப்படுத்தியுள்ளதால் எந்தவித சேதாரமும் ஏற்படாது" என செய்தியாளர்கள் சந்திப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Duraimurugan said Chembarambakkam Lake is safe


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->