அண்ணாமலைக்கு விவரம் தெரியல - அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் புதியதாக 22 பேருந்துகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:- "கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பல பேர் உயிரிழந்து கண்ணீர் கடலில் மிதக்கும் சூழலிலும் இதனை பேரிடராக மத்திய அரசு அறிவிக்கவில்லை. அவர்களுக்கு இதயத்தில் இருப்பது இதயமா? அல்லது கல்லா? என்பது தெரியவில்லை.

மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் லஞ்சம் வாங்கிவிட்டார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு, நானும் கொஞ்சம் விவரம் தெரிஞ்சவர் என நினைத்திருந்தேன். 

ஆனால் இந்த அளவுக்கு கூட இல்லை என்பது இப்போதுதான் தெரிகிறது. விவரம் தெரிந்தவர்களுடன் பேசலாம் விவரம் தெரியாதவர்களிடம் என்ன பேசுறது? என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister duraimurugan speech about bjp leader annamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->