நீட் தேர்வை திணிக்க மோடி அரசு வேகமாக இயங்குகிறது - அமைச்சர் துரைமுருகன் பேச்சு.! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வை திணிக்க மோடி அரசு வேகமாக இயங்குகிறது - அமைச்சர் துரைமுருகன் பேச்சு.!

இன்று தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.  

இந்த உண்ணாவிரத போராட்டத்தை திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். முதலில் இந்தப் போராட்டத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதன் பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், நீட் தேர்வுக்கு எதிராக எத்தனையோ இளம் சிட்டுகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோயுள்ளது. 

மாணவர்களின் மரணம் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. நீட் தேர்வை திணிக்கும் செயலில் மோடி அரசு வேகமாக இயங்குகிறது. நீட் தேர்வுக்கு எதிராக பலர் விடும் சாபம் மத்திய அரசை அகற்றும். 

இந்தியை எதிர்த்தது போல நீட் தேர்வை அகற்றுவதிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. நீட் தேர்வு ஒழிந்தது என்று சரித்திரத்தில் இடம்பெறும். இதனை உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றுவார்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister duraimurugan speech in hunger protest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->