#Breaking || 10- க்கும் மேற்ப்பட்ட அரசியல்வாதிகள் வலியுறுத்தல்.. விடாப்பிடியாக நிற்கும் அமைச்சர்.. சற்றுமுன் பேட்டி.!  - Seithipunal
Seithipunal


மூன்று நாட்களுக்குள் சரியாக கூடிய காய்ச்சலுக்கு எப்படி அனைத்து பள்ளிகளுக்கும் விடுப்பு அளிக்க முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் குழந்தைகளுக்கு ப்ளூ வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனை வார்டுகளில் குழந்தை நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தும் பொருட்டு புதுச்சேரி அரசு எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளியில் விடுப்பு அளித்துள்ளது.

அதுபோல தமிழகத்திலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், "இதுவரை பள்ளிகளுக்கு விடுமுறை கொடுங்கள் என்று பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டு வலியுறுத்தி வருகின்றனர்.

வெறும் மூன்று நாட்களுக்குள் சரியாக கூடிய இந்த காய்ச்சலுக்கு எப்படி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க முடியும்? 'குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் அவர்களாகவே விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்' என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் பொழுது அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் விடுப்பு அளிப்பது ஏற்க முடியாத விஷயம்.' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister ma subramaniyan about school Leave For blue virus fever


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->