மார்ச் மாதத்திற்குள் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000! வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி உறுதி! - Seithipunal
Seithipunal


திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த தேர்தல் வாக்குறுதி நீண்ட காலமாக நிறைவேற்றப்படாததால் பல்வேறு தரப்பட்ட மக்களும் அரசியல் கட்சிகளும் திமுகவின் மீது கடுமன் விமர்சனம் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் மார்ச் மாதத்திற்குள் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் தொடங்கப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி உறுதிபட தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே இளையம்பட்டி பகுதியில் மக்கள் தொடர்பு முகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி வணிகவரித்துறை மூலம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் வரும் மார்ச் மாதத்திற்குள் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதனால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Moorthy confirmed Rs1000 for heads of households by March month


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->