டாஸ்மாக் கடைகள் நேரம் மாற்றம்? அமைச்சர் முத்துசாமி இன்று ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் முத்துசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளை தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைக்துறை அமைச்சர் முத்துசாமி சமீபத்தில் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டாஸ்மாக் நிர்வாக குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அதில், டாஸ்மாக் பணியாளர்கள் அலுவலகப் பணிகள் சம்பந்தமாக சென்று வர ஏற்கனவே வழங்கப்பட்ட 500 ரூபாயிலிருந்து, 700 ரூபாயாக உயர்த்தி வழங்குதல், கடைகளில் உள்ள செலவுகள் தொடர்பாக உரிய பில் வழங்கப்பட்டு கேட்கும் தொகை முழுவதும் வழங்குதல், கடைகளை சுத்தமாக வைத்தல், கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக புகார் இல்லாமல் விற்பனை செய்பவர்களுக்கு மாதம் ரூ.2500 ஊக்கத்தொகை வழங்குதல், கடைகளில் உடையும் பாட்டில்களுக்கு இழப்பீடாக ரூ.100 வழங்குவது ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், டாஸ்மாக் கடைகள் நேரம் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் முத்துசாமி இன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

இதனைத் தொடர்ந்து நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Muthusamy discuss with tasmac employees


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->